செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: புல­னாய்வு தகவல்கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: புல­னாய்வு தகவல்

கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: புல­னாய்வு தகவல்கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: புல­னாய்வு தகவல்

1 minutes read

சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் – அஸாத், நாட்டின் தலை­நகர் கிளர்ச்­சியாளர்களிடம் வீழ்ச்­சி­யு­றலாம் என அஞ்­சியே இர­சா­யனத் தாக்­கு­தலை நடத்தி நூற்­றுக்­க­ணக்­கா­னோரை கொன்­றுள்­ள­தாக ஜேர்­ம­னிய புதிய புல­னாய்வு தக­வ­லொன்று வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஹிஸ்­புல்லாஹ் அமைப்பின் சிரேஷ்ட கட்­டளைத் தள­ப­தி­யொ­ருவர், லெப­னா­னி­லுள்ள ஈரா­னிய தூத­ர­கத்­துக்கு மேற்­கொண்ட தொலை­பேசி அழைப்பை பதிவு செய்தே ஜேர்­ம­னிய புல­னாய்வுத் தலை­வர்­களால் இந்தத் தகவல் பெறப்­பட்­டுள்­ளது.

சிரிய ஜனா­தி­பதி, தலை­ந­கரின் கட்­டுப்­பாட்டை வெற்றி கொள்­வது தொடர்­பான போராட்­டத்­தில் அ­ர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையேயான பலத்தில் ஒரு சம­நி­லையை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்­டுள்­ள­தாக அந்த ஹிஸ்­புல்லாஹ் கட்­ட­ளைத் ­த­ள­பதி தெரி­வித்­துள்ளார்.

 

இந்­நி­லையில் மேற்­படி கிளர்ச்­சி­யா­ளர்­களை பல­வீ­ன­ம­டையச் செய்து பின்­வாங்கச் செய்யும் முக­மா­கவே சிரிய அர­சாங்கம் சாறின் இர­சா­ய­னத்தை பிர­யோ­கிக்க திட்­ட­மிட்­டி­ருக்­கலாம் எனவும் ஆனால் படை­யினர் தவ­று­த­லாக அந்த இர­சா­ய­னத்தை அதி­க­ளவில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் எனவும் நம்­பு­வ­தாக ஜேர்­ம­னிய புல­னாய்வு அமைப்­பான ‘பி.என்.டி’ தெரி­வித்­தது.

”எம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட பகுப்­பாய்­வுகள் மூலம் இர­சாயன தாக்­குதல் தொடர்பில் சிரிய அர­சாங்­கமே குற்­ற­வா­ளி­யா­க­வுள்­ளது. சாறின் போன்ற இர­சா­ய­னங்­களை கொண்­டி­ருப்­பது அந்த அர­சாங்கம் மட்­டு­மே­யாகும்” என ‘பி.என்.டி’ புல­னாய்வு நிலை­யத்தின் தலைவர் ஜெர்ஹார்ட் சசின்ட்லர் தெரி­வித்தார்.

தமக்கு கிடைத்­துள்ள புதிய தக­வ­லா­னது எதிர்­வரும் நாட்­களில் சிரி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்கை தொடர்பில் தீர்மானமெடுப்பதற்கு முக்கியமானதாக அமையும் என அவர் மேலும் கூறினார்.

எனினும் ஜேர்மனியானது சிரியாவுக்கு எதிராக முன்னெடுக்க சாத்தியமான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்கமாட்டாது எனவும் கூறப்படுகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.