இர­சா­யன ஆயு­தங்­களை கைய­ளித்தால் சிரியா மீதான தாக்­கு­தலை தடுக்க முடியும்: ஜோன் கெரி லண்டனில் நிபந்தனை இர­சா­யன ஆயு­தங்­களை கைய­ளித்தால் சிரியா மீதான தாக்­கு­தலை தடுக்க முடியும்: ஜோன் கெரி லண்டனில் நிபந்தனை

சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் –- அஸாத், தனது இர­சா­யன ஆயு­தங்­களை கைய­ளிப்­பாராயின் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான தாக்­கு­தலை அவரால் தடுக்க முடியும் என அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி தெரி­வித்துள்ளார்.

லண்­டனில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஆனால் அஸாத் அந்த ஆயு­தங்­களை கைய­ளிப்பார் என தான் எதிர்­பார்க்­க­வில்லை என அவர் கூறினார்.

இரா­ணுவ தாக்­கு­த­லொன்றை தடுப்­ப­தற்கு சிரி­யா­வுக்கு தற்­போது ஏதா­வது வாய்ப்பு உள்­ளதா என ஜோன் கெரி­யிடம் வின­வப்­பட்ட போதே அவர் மேற்­படி கருத்தை தெரி­வித்தார்.

‘‘நிச்­ச­ய­மாக அஸாத் எதிர்­வரும் வாரத்தில் தனது இர­சா­யன ஆயு­தங்­களை சர்­வ­தேச சமூ­கத்­திடம் தாம­த­மின்றி முழுமையாக கையளிப்பாராயின் தாக்குதலை தவிர்த்துக் கொள்ளமுடியும்” என கெரி கூறினார்.

ஆசிரியர்