இங்கிலாந்து: முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வரலாம் – நீதிபதி அனுமதி இங்கிலாந்து: முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வரலாம் – நீதிபதி அனுமதி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிளாக் பிரியார்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சாட்சியம் அளிக்க வந்த 22 வயது முஸ்லிம் பெண் மத வழக்கப்படி முகத்தை மறைத்தபடி பர்தா அணிந்து வந்தார்.
அப்போது முகத்தில் பர்தா அணிந்திருந்தால் கண்களை பார்த்து எப்படி சாட்சியம் பெற முடியும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் இவர்தான் என்பதை நீதிமன்றம் அறிய வேண்டும். எனவே, முகத்திரையை விலக்க வேண்டும் என நீதிபதி பீட்டர் மர்பி கூறினார்.

அதற்கு பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மனித உரிமை ஆர்வலர்களும் நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தாவை விலக்க கூடாது. அவ்வாறு அவரை வலியுறுத்துவது மனித உரிமைக்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மர்பி, முஸ்லிம் பெண்கள் நீதிமன்ற விசாரணைக்கு வரும் போது பர்தா அணியலாம் என்று அனுமதி அளித்தார்.

ஆனால் வழக்கில் சாட்சியம் அளிக்க வரும் பெண் சம்பந்தப்பட்ட நபர்தானா என்பதை பெண் போலீஸ் அதிகாரி தனியறைக்கு அவரை அழைத்து சென்று பர்தாவை விலக்கி பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகு அவரது சாட்சியம் ஏற்கப்படும் என்று தீர்ப்பளித்துள்ளார்

ஆசிரியர்