வவுனியாவில் இளைஞர்களால் தமிழ் மாமன்றம் உருவாக்கம் வவுனியாவில் இளைஞர்களால் தமிழ் மாமன்றம் உருவாக்கம்

வவுனியா பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக இளைஞர்களால் “தமிழ் மாமன்றம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேசத்தில் கலை காலாச்சார செயல்பாடுகளை பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்கும் ஒரு சிறந்த நோக்கோடு தமிழ் மாமன்றம் உருவாக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

மேலும் இம் மாமன்றத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் நடராஜா கிருத்திகன் குறிப்பிடுகையில் எதிர்காலத்தில் வவுனியா பிரதேச மாணவர்களின் திறன்விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன், எமது ஆர்வத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட முடியும் என்பது எம் நம்பிக்கையாகும். எமது முதற் கட்ட நடவடிக்கையாக எமது வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்களிற்கு விவாதப் பயிலரங்குகளினை ஒழுங்கு செய்து, அதன் மூலம் மாணவர்களின் விவாதத் திறமையை வளர்க்க எம்மாலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இது வரை எம்மால் வ/ நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், வ/ கந்தபுரம் வாணி வித்தியாலயம், வ/ பூவரசங்குளம் மகாவித்தியாலயம், வ/ பூந்தோட்டம் மகாவித்தியாலயம், வ/ சி.சி.த.க.பாடசாலை, வ/ இந்துக் கல்லூரி வ/ பெரிய கோமரசங்குளம் ம. வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு இரண்டு கட்டமாக எம்மால் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை சிறப்பாகச் செய்தும் முடித்துள்ளோம்.

மேலும் ஏனைய பாடசாலைகளுக்கும் விரைவில் எமது விவாதப் பயிலரங்குகளினை நடாத்த இருக்கிறோம். அனைத்துப் பாடசாலைகளுக்கும் விவாதப் பயிலரங்குகளினை நிறைவு செய்ததும், அனைத்து பாடசாலைகளும் பங்குகொள்ளும் ஒரு மாபெரும் விவாதப் போட்டி அடுத்த மாத நிறைவில் நடாத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

எமது மன்றத்திற்கான இலச்சினை மற்றும் மகுட வாசகம் என்பவற்றினை வவுனியா பாடசாலை மாணவர்களின் மத்தியில் ஒரு போட்டியாக வைத்துள்ளோம். மாணவர்களின் கை வண்ணத்திலேயே எமது மன்றத்திற்கான இலச்சினை மற்றும் மகுட வாசகம் உருவாகவுள்ளது. போட்டிக்கான திகதி முடிவில், எமக்கு பல சித்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. விரைவில் இலச்சினை மற்றும் மகுட வாசகம் என்பவற்றை தெரிவு செய்து, வெற்றியாளர்களுக்கு பரிசில்களையும் வழங்கக் காத்திருக்கிறோம். தொடர்ந்து கவிதைக்கான பயிலரங்குகளினையும் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

161

148

147

074

073

163

201

198

ஆசிரியர்