Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல்

வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல்

1 minutes read

வட மாகாண சபையில் வெற்­றி­பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொழும்­பிலும் தமது அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பித்து மட்­டக்­கு­ளி­யையும் வெள்­ள­வத்­தை­யையும் நந்­திக்­க­ட­லாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. அதற்கு தமிழ் மக்கள் இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

1977 ஆம் ஆண்டில் தமிழ்த் தரப்பு பய­ணித்த பாதை­யி­லேயே தற்­போது தமிழ்க் கூட்­ட­மைப்பு பய­ணிக்­கின்­றது. எனவே அன்று அமிர்­த­லிங்­கத்­துக்கு ஏற்­பட்ட நிலை­மையே விக்கி­னேஸ்­வ­ர­னுக்கும் சுமந்­தி­ர­னுக்கும் ஏற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கில் மீண்டும் இன­வா­தத்தை உரு­வாக்கி தற்­போ­தைய நிலைமை உரு­வா­கு­வ­தற்கு இந்­தி­யாவும் தமி­ழ­க­முமே முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­க­வேண்டும். இந்­தியா அன்று இலங்கை விட­யத்தில் தலை­யிட்டு அதன் பிர­த­ம­ரையும் 1200 இரா­ணுவ வீரர்­க­ளையும் இழந்­தது. அதே பாதை­யி­லேயே இந்­தியா தற்­போ­தும் ப­ய­ணித்­துக்­கொண்­டிருக்­கின்­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட் டார்.

வடக்குத் தேர்தல் முடி­வுகள் நாட்டில் எதிர்­கா­லத்தில் பயங்­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தேகம் இல்லை. எனவே இதற்கு இட­ம­ளித்த அர­சாங்­கமும் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நினைத்­த­வாறு ஆடு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More