நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலிநைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி

நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் விவசாயக்  கல்லூரியொன்று அமைந்துள்ளது.

அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர்.

ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர்.

வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

ஆசிரியர்