Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கைஅமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கைஅமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

1 minutes read

அமெ­ரிக்க குடி­ய­ரசு கட்­சியின் ஒரு பழை­மை­வாத பிரி­வொன்று நாடு கடனில் மூழ்­கு­வதை அனு­ம­திப்­ப­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.

அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் வரவு, செலவுத் திட்­ட­மொன்று தொடர்பில் இணக்கம் காணத்­த­வ­றி­ய­தை­ய­டுத்து அந்­நாட்டு அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், பராக் ஒபாமா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலையில் தோல்வியில் முடி­வ­டைந்­தது.

அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டமை குறித்து ஜன­நா­யக கட்­சி­யி­னரும் குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

மேற்­படி நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000 ஊழி­யர்கள் ஊதி­ய­மில்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.

அத்­துடன் தேசிய பூங்­காக்கள், சுற்­றுலா ஸ்தலங்கள், அர­சாங்க இணை­யத்­த­ளங்கள் அலு­வ­லக கட்­ட­டங்கள் என்­பன மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், கடன்களின் வரை­ய­றைகள் உயர்த்­தப்­படா விட்டால் இந்த மாதம் 17 ஆம் திகதி அமெ­ரிக்க அர­சாங்கம் கட்­ட­ணங்­களைச் செலுத்­து­வ­தற்கு பண­மின்­றிய நிலையை எதிர்­கொள்ள நேரிடும்.

இந்­நி­லையில், பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையை கட்­டுப்­ப­டுத்தி வரும் குடி­ய­ர­சுக்­கட்­சி­யினர், அர­சாங்கம் தனது செயற்­பா­டு­களை தொடர நிதி­ய­ளிப்­ப­தற்கும் கடன் வரை­ய­றையை அதி­க­ரிப்­ப­தற்கும் பதி­லீ­டாக பராக் ஒபா­மா­வி­ட­மி­ருந்தும் அவ­ரது ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் சலு­கை­களை கோரி­யுள்­ளனர்.

அவர்கள் கடந்த ஆண்டு தேர்­தலில் முக்­கிய விவ­கா­ர­மாக அமைந்த சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்த சட்­டத்தை தாம­தப்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் பராக் ஒபாமா புதன்­கி­ழமை வோல் வீதி­யி­லுள்ள ஜேபி மோர்­கன் சேஸ், கோல்ட்மான் சக்ஸ், அமெ­ரிக்க வங்கி ஆகி­யன உள்­ள­டங்­க­லான முக்­கிய வங்­கி­களின் தலை­வர்­களைச் சந்­தித்து கடன் வரையறை மற்றும் ஏனைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க நிதி சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்களான வங்கியாளர்கள், கடன் வரையறைகளை உயர்த்த வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More