மூழ்கிய காருக்குள் உயிருடன் குழந்தை !மூழ்கிய காருக்குள் உயிருடன் குழந்தை !

நான்கு மாதமே ஆன குழந்தை , சுமார் 4 நிமிடம் மூழ்கிய காருக்குள் இருந்த மாயம் ! எவ்வாறு உயிர் பிழைத்தது ? பிரித்தானியாவின் புறநகர்பகுதியில் வசித்துவரும் பெக்கி தொம்சன் என்னும் 21 வயது பெண்ணுக்கு 4 மாதங்களே ஆன குழந்தை ஒன்று இருக்கிறது. அவர் தனது கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் காரில் சென்றவேளை, அதிவேகமாக வந்த பாரிய வாகனம்  ஒன்றை அவர் எதிர்கொண்டுள்ளார். இதனால் அவர் தனது காரை கரைக்கு கொண்டுவரவே , அந்தக் கார் சறுக்கி அருகில் உள்ள ஏரியினுள் விழுந்துவிட்டது. கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பெக்கி தொம்சன், தன்னை ஆசனப் பட்டியில் இருந்து முதலில் விடுவித்து நீரில் இருந்து வெளியே வந்து, பின்னர் பின் கதவை திறந்து தனது 4 மாதக் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

 

இக் குழந்தை சுமார் 4 நிமிடம் காரில் இருந்திருக்கிறது. குழந்தை மூர்ச்சையுறும் நிலையில், இருந்ததோடு அதன் உதடுகள் நீல நிறத்திற்கு மாறி குழந்தை இறக்கும் தறுவாய்க்குச் சென்றுள்ளது. இருப்பினும் தாயார் விட்ட பாடாக இல்லை, வாய் மூலமாக ஓட்சிசனை  செலுத்திக்கொன்டு 999 அவசர சேவைப் பிரிவுக்கு தொடர்புகொண்டுள்ளார். விரைந்து வந்த பரா மெடிக்ஸ், அக் குழந்தைக்கு நெஞ்சில் அதிர்வு  கொடுத்து, மீண்டும் இதயத்தை துடிக்கவைத்துவிட்டார்கள். குழந்தை குடித்த நீரும் வெளியே வந்து, குழந்தை மிகவும் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.

 

மூளைக்கு சில நொடிகள் ஒட்சிசன்  செல்லவில்லை என்றாலும் மூளைச் சாவு நடைபெற வாய்ப்பு இருப்பதோடு , சில வேளைகளில் குழந்தை பார்சவாதத்தால் பீடிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இக் குழந்தையை மருத்துவர்கள் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளார்கள். ஆனால் என்ன அதிசயம், அக் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

ஆசிரியர்