December 7, 2023 4:14 am

கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமானம்கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

imஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்கு 141 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.

 

புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. ஊழியர்கள் சோதனையிட்டபோது மின்னணுக் கோளாறினால் இந்தத் தடங்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

 

தொலைதூரப் பயணத்தில் பயணிகளுக்கு ஒரு கழிப்பறை செயல்படாமல் இருப்பது அசௌகரியத்தை அளிக்கும் என்று கருதிய விமான நிறுவனம், விமானத்தை மீண்டும் மாஸ்கோவிற்கே திருப்புமாறு தகவல் அளித்தது. எனவே, புறப்பட்ட ஐந்து மணி நேரத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானத்தை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்ததாக விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு வர்த்தக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பாட்டரியில் ஏற்பட்ட தீயினால் இந்த உயர்ரக வகை விமானங்கள் நடுவில் சிறிது காலம் இயக்கப்படாமல் இருந்தன.

 

போயிங் நிறுவனத்தின் வர்த்தக எதிரியான ஏர்பஸ் நிறுவனத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் இந்த வாரம் 9.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகள் நேற்று காலை வரை 2.1 சதவிகிதம் விற்பனை மதிப்பில் உயர்ந்து காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்