April 2, 2023 4:33 am

பிரித்தானிய பிரதமர் கேள்விகள் எழுப்பினால் அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படும் பிரித்தானிய பிரதமர் கேள்விகள் எழுப்பினால் அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் இலங்கை பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொண்டு தெரி­விக்கும் விட­யங்­க­ளுக்கு இலங்­கையின் சார்பில் உரிய விளக்­கங்கள் அளிக்­கப்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் கரு­ணா­தி­லக்க அமு­னு­கம தெரி­வித்தார்.
எவ்­வா­றெ­னினும் இலங்கை தொடர்பில் பிரித்­தா­னிய பிர­தமர் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ள­தாக ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­னவே தவிர உத்­தி­யோ­க­பூர்­வ­மாகஎந்த அறி­விப்பும் எமக்கு விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொண்டு இலங்­கை­யிடம் பல கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ள­தாக பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்பில் தகவல் வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் இவ்­வி­டயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்ள பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ள­தாக ஊட­கங்­க­ளி­லேயே செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மாறாக அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­புகள் எதுவும் எம்மை வந்து சேர­வில்லை.
எனவே ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்ள தக­வல்­களின் அடிப்­ப­டையில் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் என்ற வகை யில் என்னால் கருத்து வெளி­யிட முடி­யாது.

எவ்­வா­றெ­னினும் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொள்ளும் எந்­த­வொரு நாட்­டி­னதும் தலை­வ­ருக்கு எந்­த­வொரு விட­யத்­தையும் கூறு­வ­தற்­கான ஜன­நா­யக உரிமை இருக்­கின்­றது.

ஆனால் வெளி­நாட்டுத் தலை­வர்கள் இலங்கை தொடர்பில் கேள்­வி­க­ளையோ அல்­லது ஏதா­வது விட­யங்­க­ளையோ எழுப்­பினால் அவற்­றுக்கு உரிய விளக்­கங்­களை அளிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்­பி­லான அதி­கா­ரிகள் தயா­ராக இருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் ஏதா­வது விட­யங்­களை எழுப்­பினால் அவற்­றுக்கு உரிய விளக்­கங்­களை அளிப்­ப­தற்கு எமது அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுப்­பார்கள் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்