பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதிபொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், இலங்கையில் இடம்பெற உள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்வார் என கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இளவரசர் சார்ள்ஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப விழா மற்றும் இரவு விருந்திலும் கலந்து கொள்வார்.

இந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்