திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணமகளுக்கு மொட்டையடித்த மணமகன்திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணமகளுக்கு மொட்டையடித்த மணமகன்

a1

திருமணமாகி ஒரு மணி நேரத்தின் பின்னர் கண வன் தனது தலை முடியை ஷேவ் செய்ய அனுமதித்து விருந்தினர்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று அண்மையில் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. ரொக்ஸி க்ரிவ்ஸ் (31 வயது)  மைக் (30) ஜோடியே இவ்வாறு திருமண நாளில் தலை முடியை சேவ் செய்துள்ளனர்.

a2

யோர்க்ஷயரைச் சேர்ந்த இந்த ஜோடி புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கவும் புற்றுநோய் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே திருமண நாளில் மணமகளுக்கு மொட்டை போட திட்டமிட்டுள்ளனர். இது குறித்து 2 குழந்தைகளுக்கு தாயான ரொக்ஸி கூறுகையில், எனது 16ஆவது வயதிலிருந்தே புற்று நோய் ஆராய்ச்சிக்காக மொட்டை போட நினைத்திருந்தேன்.

 

ஆனால் அதுவொரு முக்கியமான நாளாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.இதனை எனது திருமண நாளில் செய்ய மைக்கிடம் கேட்டுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார். புற்றுநோயினால் இவர்களது சொந்தங்கள் இறந்ததன் பின்னர் இந்த ஜோடி அறப்பணிக்கு உதவிசெய்து வருகின்றது. இதற்காக  http://www.justgiving.com எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்து பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 1300 பவுண்கள் நிதி சேகரித்துள்ளனர்.இருப்பினும் திருமண நாளில் மொட்டை சம்பவத்தால் வைபவத்தில் கலந்துகொண்ட பலரும் அதிச்சியடைந்துள்ளனர்

ஆசிரியர்