செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பசுமைத்தோட்டம்செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பசுமைத்தோட்டம்

10 ஆயிரத்திற்கு அதிகமான தாவரங்களைக் கொண்டு பிரித்தானியாவின் மத்திய லண்டனில் 68 அடி உயரான சுவரில் செங்குத்தான தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செங்குத்தான பசுமைத் தோட்டமுள்ள சுவர் விக்டோரியா ஸ்டேஷனுக்கு அண்மையில் உள்ளது. கண்கவரும் வகையிலமைந்துள்ள செங்குத்து தோட்டத்தினால் கடும் மழைகாலத்தில் மத்திய லண்டனில் வெள்ளம் ஏற்படுவதனை தவிர்க்க முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 10 ஆயிரம் தாவரங்களில் பட்டர்கப்ஸ், ஸ்டோபரி என 20 பருவகால தாவரங்கள் உள்ளதாம்.

 

இத்திட்டமானது லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்ஸனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலைநகரின் சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கிலேயே இத்தோட்டம் வடிவமைக்கப்படடுள்ளது. கெரி க்ரேன் ஒப் க்ரீன் ரூப் கொன்ஸல்டிங் எனும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட் இச்சுவரை ட்ரீபொக்ஸ் எனும் நிறுவனம் பாராமரிக்கின்றது.  இது குறித்து ட்ரீபொக்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்மன்டோ கூறுகையில், வருடம் முழுவதும் இச்சுவர் பூத்துக்குலுங்கும். பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள் என உயிரின் பல்வகையும் விக்டோரியாவில் பேணப்படும் உயிர்ப்பல்வகைமையை இது ஊக்குவிக்க உதவும். அத்துடன் சுற்றுச்சூழலும் இயற்கையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் இதேபோன்றதொரு 2005ஆம் ஆண்டு ஐலிங்டன் நகரில் உருவாக்கப்பட்டது. ஆனால் நீர் வழங்கல் முறைகள் திருப்தியளிக்காமல் தாவரங்கள் இறக்க அத்திட்டம் முடிவுக்கு வந்தது.

green-house

ஆசிரியர்