இங்கிலாந்தில் இலங்கைத் தமிழ்ப்பெண் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுகின்றார் !இங்கிலாந்தில் இலங்கைத் தமிழ்ப்பெண் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுகின்றார் !

பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத்தமிழ் பெண் உமா குமரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சிக்குள் நடைபெறும் உள்ளகத் தெரிவில் லண்டன் Harrow East பகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேபர் கட்சியினுடைய தொழிற்சங்கங்களிலும் மற்றும் கட்சியினுடைய உயர் மட்டங்களிலும் இவருக்கு அதிக செல்வாக்கு காணப்படுவதால், விரைவில் இறுதி முடிவு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர்