வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக சுன்னாகம் நூலகம் தெரிவு வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக சுன்னாகம் நூலகம் தெரிவு

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் சுன்னாகம், உடுவில் ஆகிய பொது நூலகங்கள் இரண்டும் சிறப்பு விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் மேற்கொள்ளும் தேசிய வாசிப்புமாத நிகழ்வு-2012 ல் சுன்னாகம், உடுவில் பொது நூலகங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 2013ம் ஆண்டின் வடமாகாணத்திற்கான சிறந்த நூலகங்களுக்கான தெரிவில் சுன்னாகம் பொது நூலகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29 ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர்