கனடியத் தமிழர்களின் பேரெழுச்சி: பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்கனடியத் தமிழர்களின் பேரெழுச்சி: பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்

கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர் ஸ்டீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்குமுகமாக இப்பேரெழுச்சி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கனடியத் தமிழர்களின் இவ் முயற்சிக்கு உலகமெங்குமுள்ள தமிழர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்தவன்னமுள்ளன.

canada_pereluchchi_006

20

18

17

11 (1)

ஆசிரியர்