கடையில் திருடிய பெண்ணின் பையில் சிசுவின் சடலம்..கடையில் திருடிய பெண்ணின் பையில் சிசுவின் சடலம்..

GirlsShoppingநியூயார்க்கில் உள்ள கடை ஒன்றில் திருடிய 2 இளம்பெண்களை பரிசோதித்த போலீசார், அவர்களில் ஒருவரின் பையில் ஒரு குழந்தையின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

நியூயார்க்கில் உள்ள விக்டோரியா சீக்ரட் ஸ்டோர் என்னும் கடைக்கு 17 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். இவர்கள் அந்த கடையில் சில பொருட்களை வாங்கியப்பிறகு, கடை ஊழியர்களுக்கு தெரியாமல் மேலும் சில பொருட்களை அவர்களின் பையில் வைக்க முயற்சித்தனர்.

 

இதனை கவனித்த கடையின் காவலாளிகள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இப்பெண்களின் பையை பரிசோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அப்பெண்களில் ஒருவரின் பையில் ஒரு குழந்தையின் சடலம் இருந்தததை கண்டு திடுக்கிட்ட போலீசார் உடனடியாக அவர்களை பெல்லிவுயூ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

 

மருத்துவ பரிசோதனைக்கு பின், இவர்களில் யார் அக்குழந்தையை பெற்றெடுத்தது, குழந்தை இறக்க காரணமென்ன ஆகியவை தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்