பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன் பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன்

mahinda and manmohan HT

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டில் பங்­கேற்­பது குறித்து அர­சியல் ஆலோ­சகர்­க­ளுடன் பிர­தமர் மன்­மோகன் சிங் தீவிர ஆலோ­சனை நடத்தி வரு­கிறார் என்று ரி.என். செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டில் இந்­தியா பங்­கேற்கக் கூடாது என்று தமி­ழக அரசு மற்றும் தி.மு.க. உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள், அமைப்­புகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லையில் வட மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன், பொது­ந­ல­வாய மாநாட்டில் பங்­கேற்க வரு­மாறு பிர­தமர் மன்­மோகன் சிங்­குக்கு அழைப்பு விடுத்­துள்ளார். மாநாட்டில் பங்­கேற்­பதன் மூலம் தமிழர் நல­னுக்­கான நட­வ­டிக்­கை­களை இந்­தியா தொடர முடியும் என்று விக்­னேஸ்­வரன் கூறி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. வடமாகான முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு செல்லும் பிரிட்டன் பிர­தமர் கமரூன், யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. அவ­ரைப்­போல மன்­மோகன் சிங்கும் யாழ்ப்­பா­ணத்தில் பயணம் மேற்­கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே மாநாட்டை இந்­தியா புறக்­க­ணித்தால் சீனா, பாகிஸ்தான் உட­னான நட்பை இலங்கை மேலும் வலுப்­ப­டுத்­திக்­கொள்ளும் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லை­யில்தான் இலங்­கையில் நடை­பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசகர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இணையத்தளங்களில் அண்மையில் பரவலாக உலாவரும் மேலுள்ள கேலிச்சித்திரம் பல வினாக்களுக்கு விடைதருகின்றது.

ஆசிரியர்