லண்டனில் பாரிய ஆர்பாட்டம் இன்று நடைபெறுகின்றது லண்டனில் பாரிய ஆர்பாட்டம் இன்று நடைபெறுகின்றது

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.  இன்று மாலை 4 மணிக்கு Embankment புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10, Downing Street முன்பாக இப்பேரணி நிறைவடையும்.
பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும், பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்க‌ளை மையப்படுத்தி மாபெரும் பேரணிக்கான அழைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ளது. இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கின்றது.
btfprotest-2

ஆசிரியர்