பொதுநலவாய மாநாடு | பிரித்தானிய தமிழரின் லண்டன் ஆர்ப்பாட்டம் பொதுநலவாய மாநாடு | பிரித்தானிய தமிழரின் லண்டன் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க கோரி நேற்று மாலை லண்டனில் 4 மணி முதல் 7 மணி வரை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் மற்றும் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டினை புறக்கணிக்க கோரி தமிழ் மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் இந்த வேளையில் மேலைத்தேச ஊடகங்களும் ஆதாரங்களை வெளிக்கொண்டுவரும் போது பிரித்தானிய தலைவர்கள் இவ் மாநாட்டுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தார்கள்.

cc

ஆசிரியர்