இலங்கையில் கின்னஸ் சாதனைக்காக இடம்பெற்ற திருமணம்இலங்கையில் கின்னஸ் சாதனைக்காக இடம்பெற்ற திருமணம்

கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார்.

 

அவரது ‘மணாளியன்கே மஹகெதர” (மணப்பெண்ணின் தாய் வீடு) என்னும் அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு புகழும் கீர்த்தியும் பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர் இந்த சாதனையில் இறங்கியுள்ளார்.

 

இத்திருமணத்தின் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளும், தோழர்களும் இதில் இடம்பிடிக்கவுள்ளனர்.

இத்திருமண வைபவத்திற்கு முதற் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

ஆகக்கூடியதாக தாய்லாந்திலேயே 96 மணப் பெண் தோழிகள் கலந்துகொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சம்பி சிறிவர்தனவே ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளை தானே அலங்கரித்து கின்னஸ் பதிவேட்டில் இடம்பிடிக்க இம் முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1800072

ஆசிரியர்