பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்து !பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்து !

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் இடையே நேற்று மாலை சந்திப்பு நடைபெற்றது.

BTF மற்றும் GTF பிரதிநிதிகள் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரித்தானிய அரச தலைவர்கள் செல்வதை தவிர்க்குமாறு இச் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் பிரதமர் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசியபோது சேனல் 4 இல் ஒளிபரப்பு செய்த போர் தவிர்ப்பு வலைய ஆவணப்படத்தினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்காக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்ப்பதைவிட தமது அதிகாரிகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் இலங்கை சென்று அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் எவ்வாறான அழுத்தங்களை கொடுக்கப்போகின்றார்கள் என தெரிவிக்கவில்லை மேலும் அவை எவ்வாறான தாக்கங்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போகின்றன என்பது எதிர்வரும் காலங்களில் முக்கிய கேள்வியாக இருக்கலாம்.

பிரித்தானியாவில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்