கெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்கெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்

செனல் – 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே வடக்கு நோக்கிப் பயணித்த ரயிலை அனுராதபுரத்தில் வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமென கெலும் மெக்ரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் பொது மக்கள் கொல்லப்பட்டமையே அதிகம். இராணுவத்தினர் அதிகளவில் போர்க் குற்றங்களை செய்துள்ளனர் என்பதற்கான சர்வதேச ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் நாம் செயற்படுகின்றோம். இதற்கான சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று சனல்-4  ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்