பொது நலவாய மாநாடு ஆரம்பம் | தலைவர்களின் உரையை அவதானிக்க உலகம் தயார் பொது நலவாய மாநாடு ஆரம்பம் | தலைவர்களின் உரையை அவதானிக்க உலகம் தயார்

பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநா ட்டின் ஆரம்ப வைபவம் இன்று காலை 10 மணி­ய­ளவில் கொழும்பு தாமரை தடா­கத்தில் ஆரம்பமானது. அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மான அரச தலை­வர்கள் மாநாடு நாளை மறு­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பகல் ஒரு மணி­வரை நடை­பெறும்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­றும் அரச தலை­வர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரிட்டிஷ் இள­வரசர் சாள்ஸ் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா மற்றும் பொது­ந­ல­வாய அமைப்பின் அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்கள் மற்றும் விசேட பிர­மு­கர்கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்டுள்ளனர்.

இந்­நி­லையில் ஆரம்ப நிகழ்வில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிரிட்டிஷ் இள­வ­ரசர் சாள்ஸ் மற்றும் அவு­ஸ்­தி­ரே­லிய பிர­தமர் டோனி அப்போர்ட் ஆகியோர் உரை­யாற்­ற­pனர்.

பொது நலவாய அமைப்பானது தண்டனை வழங்கும் அமைப்போ அல்லது தீர்ப்பு வழங்கும் அமைப்போ அல்ல. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை. தற்போது பிரதான மனித உரிமையான வாழும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  இலங்கையின் சகவாழ்வு மற்றும் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவித்தார்.

ஆசிரியர்