செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றதுயாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றது

யாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றதுயாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றது

1 minutes read

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் கடந்த காலத்தில் உறவுகளை இழந்தவர்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க ஆர்ப்பரித்தனர்.

சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என உறவுகளை இழந்தவர்களின் கூக்குரலால் யாழ்.நல்லூர் பகுதி அதிர்ந்தது.

ஓவென்று கதறல் சத்தம் வானம் பிளந்த நிலையில் உறவுகளின் கண்ணீர் போராட்டமே சோக மயமாகியது.

இந்த போராட்டங்களில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் கல்நது கொண்டனர்.

இதேவேளை மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தி கடும் சோதனை நடவடிக்கைகளை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருவதோடு, ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

m1

m3

m6

m5

m4

m2

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.