இன்று லண்டனில் காமன்வெலத் அலுவலகம் முன் ஆர்பாட்டம் | காமன்வெலத் மாநாட்டில் நீதி கிடைக்குமா இன்று லண்டனில் காமன்வெலத் அலுவலகம் முன் ஆர்பாட்டம் | காமன்வெலத் மாநாட்டில் நீதி கிடைக்குமா

இன்று கொழும்பில் காமன்வெலத் நாடுகளின் தலைவர்கள் கூடி உச்சிமாநாட்டை தொடங்கியுள்ளார்கள். இன் நிலையில் அதற்கு கடும் எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் பாரிய ஆர்பாட்டம் ஒன்று பிரித்தானிய தமிழர் பேரவையினரால்(BTF) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மாநாடு ஆரம்பிக்கும் தினத்தில் இந்த ஆர்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது லண்டனில் உள்ள காமன்வெலத் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். தமிழர்கள் குறைந்த பட்சம் இந்த எதிர்பையாவது காட்டவேண்டும் என்று செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்தக கண்டனப் போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணிவரை நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். லண்டனில் காமன்வெலத் அலுவலகம் போல்-மோல் என்னும் இடத்தில் உள்ளது. (Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX.) அதற்கு அருகாமையில் உள்ள தொடரூந்து(ரியூப்) நிலையங்கள்;

Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross

 

ஆசிரியர்