Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரைஇலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை

இலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரைஇலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை

1 minutes read

இலங்­கைக்­கான தனது விஜயம் தொடர்பில் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் இன்று திங்­கட்­கி­ழமை பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யாற்­ற­வுள்ளார்.

இந்தத் தக­வலை பிரித்­தா­னி­யாவின் பொது­ந­ல­வாய விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க அமைச்சர்  ஹகோ ஸ்வேயார் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன், ஆகியோர் நேற்று இரா­ஜாங்க அமைச்­சரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இந்தச் சந்­திப்­பின்­போதே ஸ்வேயார் இதனை தெரி­வித்­துள்ளார்.

இச்­சந்­திப்பில் பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கம­ரூனின் யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இலங்­கையின் தற்­போ­தைய நிலை தொடர்­பா­கவும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்­வொன்றை காண்­ப­தற்­கான வழி­வ­கைகள் தொடர்­பிலும், இச்­சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளன.

மனித உரிமை விவ­காரம், யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள், ஊடக சுதந்­திரம், என்­பவை தொடர்பில் பிரித்­தா­னியா தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தும். நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு நிரந்­தர தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதே பிரித்­தா­னி­யாவின் நிலைப்­பா­டாகும். அதற்­காக தொடர்ந்தும் பிரித்­தா­னியா பாடு­படும் என்று இரா­ஜாங்க அமைச்சர் ஸ்வேயார் தெரி­வித்­துள்ளார்.

நேற்று பிற்­பகல் 12.30 மணி­முதல் 1.30 மணி­வரை இந்தச் சந்­திப்பு இடம் பெற்­றுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன் நேற்று அதி­காலை நாடு­தி­ரும்­பி­யுள்ளார். இன்­றைய தினம் அவர் பிரித்­தா­னியப் பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­த­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More