சிங்கள மக்களுக்கே பிரச்சினை தமிழர்களுக்கு முழுச் சுதந்திரம் | முத்தையா முரளிதரன் சிங்கள மக்களுக்கே பிரச்சினை தமிழர்களுக்கு முழுச் சுதந்திரம் | முத்தையா முரளிதரன்

போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர். “போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?” என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். “நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம். அதைவிடுத்து ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை. இலங்கை தொடர்பில் சர்வ தேச நாடுகள், தப்பான அபிப்பிராயத் தைக் கொண்டுள்ளன. இதனை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடமும் நான் எடுத்துரைத்தேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனின் இந்த கருத்துக்கள் தமிழர் மத்தியில் பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பல ஊடகவியலாளர்களுக்கு மேற்படி கருத்துக்களை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் இக்கருத்தால் அவர் எதனை சாதிக்க நினைக்கின்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆசிரியர்