April 2, 2023 3:54 am

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைதுகவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள்; உறுதி செய்துள்ளனர்.
நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் வழித்து வந்தார்.
கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்