சென்னையில் ஆர்ப்பாட்டம்: இயக்குநர் கெளதமன் உள்பட 31 பேர் கைதுசென்னையில் ஆர்ப்பாட்டம்: இயக்குநர் கெளதமன் உள்பட 31 பேர் கைது

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து அண்ணா மேம்பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:- தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் அண்ணா மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குநர் கெüதமன், மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித் தருமாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மேம்பாலத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த அமைப்பைச் சேர்ந்த 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

ஆசிரியர்