செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியா அதிபர் அல்-அஸாத் | அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்சிரியா அதிபர் அல்-அஸாத் | அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்

சிரியா அதிபர் அல்-அஸாத் | அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்சிரியா அதிபர் அல்-அஸாத் | அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்

1 minutes read

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் தெரிவித்தார்.

அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சிபிஎஸ்ஸூக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்.

சிரியா அதிபர் அல்-அஸாதை, சிபிஎஸ் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளரான சார்லி ரோஸ் பேட்டி கண்டுள்ளார். அதில் அல்-அஸாத் கூறியிருப்பதாவது:

பேச்சுவார்த்தை என்றாலே பரஸ்பரம் மரியாதை செலுத்துவதாகும். எல்லா பேச்சுவார்த்தையும் நன்மை தரக் கூடியதுதான்.

இதுவரை எங்களுடன் பேச்சு நடத்த அமெரிக்கா முன்வரவில்லை. சிரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை. ஆனால் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த சிரியா தயாராக உள்ளது என்றார்.

அல்-அஸாதின் பேட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ஒளிபரப்பாகும்.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெறத் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆயுதமேந்திப் போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமானால், அதிபர் அல்-அஸாதுடன் பேச்சு நடத்த வேண்டியது அவசியம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த மார்ச் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

உலக அளவில் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அல்ஃ-அஸாதுடன் நேரடியாகப் பேச்சு நடத்தப்பட மாட்டாது என்றும், அவரது அரசில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கமளித்தது.

சிரியா அரசு – கிளர்ச்சியாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய ரஷியா முயற்சியெடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.