அமெரிக்காவின் இணையதளக் கட்டமைப்பில் ஈரானியர்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக இணையதளப் பாதுகாப்பு நிறுவனமான “நோர்ஸ்’ வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இணையதளம் மூலம் ஊடுருவி, தாக்குதல் நிகழ்த்தும் திறனை ஈரான் வேகமாக வளர்த்து வருகிறது.
அந்த நாட்டின் ராணுவத்துடனும், அரசு அமைப்புகளுடனும் தொடர்புடயை மின்னணுத் தகவல் பரிவர்த்தனை மையங்களில் இருந்து அமெரிக்க வலைதளங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ரகசிய தகவல்களைத் திருடவும், வேவு பார்க்கவும் முக்கிய வலைதளங்கள் மீது தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள ஊடுருவலில் சீனாவும், ரஷியாவும் முதன்மை வகித்தாலும், அந்தத் திறனை ஈரான் வேகமாக வளர்த்து வருகிறது என அமெரிக்க உளவு அமைப்புகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.