பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மறுநாள் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். புதிய பிரதமராக தெரேசா மே புதன் கிழமை பதவி ஏற்பாரென டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் தொடர்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பின் முடிவில் பிரித்தானிய மக்கள் விலகுவதென தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பிரித்தானிய அரசியலில் குழப்பங்கள் நிலவிவந்தன.
இதனால் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக புதிய பிரதமரினை தேர்வு செய்ய நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் ஆண்ட்ரியா லீட்சும் விலகியதை அடுத்து, உள்துறைச் செயலாளர் தெரேஸா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.