துருக்கி பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
மாணவர்களும் துப்பாக்கி கலாச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் துருக்கியில் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் பல்கலைக்கழக துணைத்தலைவர், விரிவுரையாளர், ஆசிரியர் செயலாளர் மற்றும் பணிப்பாளர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
