பொதுத்தேர்தல் நடத்துவதன் பொருட்டு மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர்து நஜீப் ரசாக் அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்றில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் மலேசியாசின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட்டின் அரசியல் கட்சி தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியியை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் முழுமை செய்யப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
