செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சி.வி, விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

சி.வி, விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

0 minutes read

மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையால், முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக வட பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சினூடாக உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறினார்.

அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கத் தயார் எனவும் வட பிராந்தியத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதேவேளை, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.