செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய அல்ஜீரிய ஜனாதிபதி

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய அல்ஜீரிய ஜனாதிபதி

0 minutes read

அல்ஜீரிய ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அந்நாட்டு ஊடக சேவை மையத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனது பங்களிப்பு தொடர்பில் பெருமையடைவதாகவும் ஆனால் தனது கடமையில் தோற்றுவிட்டதாகவும் அப்டெலாஸிஸ் போட்விலிக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருட காலமாக அல்ஜீரிய ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்டெலாஸிஸ் போட்விலிக்கா, அவரது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, ஓய்வுபெறுமாறு அல்ஜீரிய இராணுவத் தளபதியும் கோரியுள்ளார். இதனையடுத்து அவர் பதவி விலக்கியமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.