இதைமுன்னிட்டு ‘பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’, ‘சைக்கிள் ஓட்டும் விநாயகர்’, ‘காளையை அடக்கும் விநாயகர்’, ‘கிரிக்கெட் விளையாடும் விநாயகர்’, ‘நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர்’, ‘ரயில் ஓட்டும் விநாயகர்’ என, வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9,000  தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை பயன்படுத்தி 30 அடி உயரத்தில்  அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இந்த சிலையை, 70 பக்தர்கள் ஒன்றிணைந்து கடந்த 20 நாட்களாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.