செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெள்ளத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

வெள்ளத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

0 minutes read

யாழ்ப்பாண விமான நிலையம் வெள்ளம்க்கான பட முடிவுகள்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது.

யாழ்ப்பாண விமான நிலையம் வெள்ளம்க்கான பட முடிவுகள்

இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.

யாழ் விமான நிலையம் தேர்தலை மையமாக கொண்டு அவசர அவசரமாக அமைக்கப்பட்டது. இது தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளவே என்ற என்ற விமர்சனம் தற்போது எழுந்திருக்கின்றது.

யாழ்ப்பாண விமான நிலையம் வெள்ளம்க்கான பட முடிவுகள்

இதேவேளை நாடுமுழுவதும் பலத்த மழை பெய்து வருவதனால் வெள்ளம் வருவது சாதாரண விடயம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் கனமழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரு விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.