ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாச அடிப் பணிந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டினார்.

இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியினர் முன்வைக்கப்பட்டிருந்த 13 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கே தாம் ஆதரவினை தெரிவிப்பதாக தமிழ் அரசுக் கட்சி தெரிவித்திருந்த நிலையில் , தற்போது புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மஹிந்த யாப்பாக்கான பட முடிவுகள்"

இந்த கோரிக்கையிலே நாட்டை பிளவுபடுத்தும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததனால் எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது தமிழ் அரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படியென்றால் சஜித் வாக்குகளை பெறுவதற்காக நாட்டை காட்டிக்கொடுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.