செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மிருசுவில் எண்மர் படுகொலை : குடும்பத்தினருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்

மிருசுவில் எண்மர் படுகொலை : குடும்பத்தினருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்

1 minutes read

யாழ்.மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகரித்து சென்றுள்ளனா். இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (20) பிற்பகல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“மிருசுவில் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு 8 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனா்.

குறித்த படுகொலை சம்பவம் தொடா்பில் இராணுவத்தினா் சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்த சிலா் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகரித்து சென்றுள்ளனா்.

பாதிக்கப்பட்ட ஒருவருரைத் தேடி வெள்ளை வாகனத்தில் வந்த நால்வர் விசாரித்துள்ளனா். அதேபோல் மற்றொருவரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபா்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவா்கள் யார் போன்ற தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனா்.

படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது.

மேலும் புலனாய்வு பிரிவினை சோ்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகள் எங்களுடையதா? என விசாரித்தனர்” என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.