செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட கொரிய அடுத்த தலைவராக இவருக்கே வாய்ப்பு.

வட கொரிய அடுத்த தலைவராக இவருக்கே வாய்ப்பு.

1 minutes read

வட கொரிய  தலைவர் கிம் ஜோங் உன்னின் உடல்நலம் குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு இடையில் அடுத்த தலைவராக அவரது நெருங்கிய உறவினர் கிம் பியாங் 2 ன் பெயர் அடிபடத் துவங்கி உள்ளது.

கிம் ஜோங் உன்னின் தந்தையின் சகோதர ரான இவர் 1970 ல் பதவிக்கு வர முயன்று அது முடியாமல் போன பின் 40 ஆண்டுகள் வெளிநாடுகளில் வட கொரியாவின் தூதராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகள் புறக்கணிப்புக்கு ஆளானாலும், வட கொரிய அதிகாரப் பதவிகளில் ரத்த உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்தும் இருப்பதால் கிம் ஜாங் உன்னின் சித்தப்பாவான கிம் பியாங் 2 தலைவராக வர வாய்ப்புகள் இருப்பதாக வட கொரிய விவகாரங்களை கவனிப்பவர்கள் கூறுகின்றனர்.

கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo Jong ) அடுத்த தலைவராவார் என கூறப்பட்டாலும் ஆணாதிக்க மனோபாவம் மிகுந்த வட கொரியாவில் அது ஏற்கப்படமாட்டாது என்றே கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.