முகக்கவசம் அணியாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மீளவும் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராகவே இன்றைய தினம் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்