March 26, 2023 11:29 pm

நுண்கிருமிகள் மூலம் நடத்தப்படும் உயிரியல் போர்!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நுண்கிருமிகள் மூலம் நடத்தப்படும் உயிரியல் போர் திறன்களை வளர்த்துக் கொள்ள, பாகிஸ்தான் ராணுவம், சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவியது தொடர்பாக, சீனாவின் வூகான் வைரஸ் ஆய்வகத்தை மையப்படுத்தி உலகம் முழுவதும் பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இந்த ஆய்வகம், பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ் வரும் டெஸ்டோ (DESTO) என்ற பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொற்று நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தியா மற்றும் மேலைநாடுகளுக்கு எதிராக உயிரியல் போர்த் திறன்களை உருவாக்குவதுதான் ரகசிய நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

மிகவும் ஆபத்தான ஆந்த்ராக்ஸ் போன்றவை தொடர்பாக ஆய்வுகள் செய்ய 3 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக,The Klaxon என்ற செய்தி இணைய தளம் கூறியுள்ளது.

உலகின் கண்டனத்தில் இருந்து தப்புவதற்காக, உயிரியல் ஆயுதங்களை தனது எல்லைக்கு வெளியே சோதித்துப் பார்க்கும் சீனாவின் ரகசிய திட்டமாக இது இருக்கலாம் என்றும் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்