Sunday, June 13, 2021

இதையும் படிங்க

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

கொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது!

சென்னை: முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். உலகளாவிய இந்த தொற்று சமயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க...

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு தொடரும் நிச்சயமற்ற நிலை!

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் நவுருத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என  அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்....

‘அகதிகளால் மலேசியாவில் சமூக பிரச்சினை’ என்கிறது மலேசியா!

மலேசியாவின் தற்போது ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 179,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2013 ல் ஐ.நா. அடையாள...

ஆசிரியர்

போலி வைத்தியரின் நகை திருட்டு அம்பலம்

நாடு முழுவதுமுள்ள சுமார் 50 அரச வைத்தியசாலைகளிற்குள் நுழைந்து, போலி வைத்தியராக நடித்து 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய “எம்டன்“ சிக்கியுள்ளார்.

அமல் கரியவாசம் என்ற இந்த நபரை, ஹோமாகவிலுள்ள வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த இவர் பாடசாலை நாட்களில் இருந்து எம்டன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். பாடசாலை நாட்களிலேயே மோசடிகளில் ஈடுபட்டதால் அந்த பெயரால் அழைக்கப்பட்டார்.

பாடசாலை காலத்தை முடித்ததும், அனுராதபுரத்தில் நிறுவனமொன்றில் பணியாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பணியிலிருந்து நீக்கப்பட்டவர், வேறு சில நிறுவனங்களில் இணைந்த போதும், அங்கெல்லாம் மோசடியால் நீக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் வேலை தேட முடியாத நிலையில் கொழும்பிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய போது, ஏற்கனவே இருந்த காதல் உறவை மறைத்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சிறிது காலத்திலேயே தனியார் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, வைத்தியராக நடித்து திருட ஆரம்பித்தார்.

வைத்தியசாலைகளிற்கு வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி நகைகளை திருடுவதே அவரது இலக்கு. வைத்தியசாலைக்குள் அவர் திருடிய ரகமே தனியானது.

முதலில் வைத்தியசாலையை நன்றாக நோட்டம் இடுவார். பின்னர் வைத்தியரை போல நடித்து வைத்தியசாலைக்கு நுழைந்து, பிறரின் கவனம் செல்லாத வெற்று அறைக்குள் நுழைந்து அ்த பகுதியிலுள்ள நோயாளர்களை அழைத்து பரிசோதனை செய்வார்.

இதன்போது நோயாளர்களின் காதணி, தங்க சங்கிலிகளை கழற்றி மேசையில் வைக்க சொல்வார். பரிசோதனையின் பின்னர், அவர்களை பிறிதொரு அறைக்கு சென்று, பரிசோதனையை முடித்து விட்டு வருமாறு கூறுவார்.

அந்த நோயாளி அங்கு சென்றதும், எம்டன் எஸ்கேப் ஆகி விடுவார்.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்குள் நுழைந்து ஒரே நாளில் 8 பெண்களின் தங்க நகைகளை திருடியிருந்தார். இது குறித்து காலி பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

அதன்படி, விசாரணையை மேற்கொண்ட பொலிசார், ஹோமகமவில் உள்ள சந்தேக நபரின் வீடு குறித்த தகவல்களை கண்டுபிடித்தனர். திடீர் சோதனையின்போது வீட்டில் இருந்த சந்தேக நபரை கைது செய்தனர்.

போலி வைத்தியராக நடித்துள்ள சந்தேக நபரை விசாரித்தபோது, ​​அவர் அனைத்து திருட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அதன்படி, கண்டியில் உள்ள வைத்தியசாலையொன்றில் திருடிய நகைகள் வீட்டில் மீட்கப்பட்டன.

நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்குச் சென்ற எம்டன், அப்பாவி பெண்களின் நகைகளை திடியது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பணத்தின் மூலம் இரவு விடுதிகளுக்குச் சென்று இன்பம் தேடினார். இப்பொழுது கம்பி எண்ணி வருகிறார்.

இதையும் படிங்க

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

தொடர்புச் செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது.

  குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த பெண்...

கடலுக்கடியில் அருங்காட்சியகம் ;ரிப்பன் வெட்டி திறந்து வைப்பு.

இலங்கையின், காலி  துறைமுகத்தில், முதன் முறையாக, கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, நீருக்கடியில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சுமார் 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள...

புராதன அனுராதபுர தமிழ் இராட்சியம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றதா?

புராதன அனுராதபுர தமிழ் இராட்சியம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றதா? ஈழத்தை 44 ஆண்டுகள் ஆண்ட மாமன்னன் எல்லாளன் தனது ஆட்சிக்காலத்தில் பல சிறப்பம்சங்களுடன் ஆட்சி புரிந்தான். சொல்லப்படாத சிறப்பம்சங்கள் என்ன ? வணக்கம் லண்டனுக்காக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

மேலும் பதிவுகள்

யாழில் 2 வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் அபாயம்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா அபிவிருத்தி செய்கிறது....

‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை!

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன்...

புதிய நாடாளுமன்ற கட்டடம் : முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய...

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கடலினுள் பேரூந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க முயற்சி!

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும்,...

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

துயர் பகிர்வு