செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா உலக அழகிப் போட்டி குறித்து பாலியல் புகார் அளித்த அழகிகள்

உலக அழகிப் போட்டி குறித்து பாலியல் புகார் அளித்த அழகிகள்

1 minutes read

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெற்றது.

இந்த நிலையில், 3, ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் சோதனை மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியாளர்கள் தங்கள் மேலாடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்தாக அவர்களின் வழக்கறிஞர் கூறி உள்ளார்.

“இது என்னை மனரீதியாக பாதித்துள்ளது. இதனால் என்னால் தூங்க முடியவில்லை” என்று அழகி ஒருவர் கூறி உள்ளார்.

தலைநகர் ஜகார்தாவில் உள்ள பொலிஸார் விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை “மிகவும் தீவிரமாக” எடுத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.