செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் குழுவினர் உள்ளிட்ட 200 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் குழுவினர் உள்ளிட்ட 200 பேர் உயிரிழப்பு

1 minutes read

கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றதால் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

தற்போது, 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதுடன், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மீதமுள்ள பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது.

இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 4 பணய கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.

இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.