நேரத்தைப் பின்பற்றுவது என்பது ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ளும் ஓர் அடையாளம் என்று பலரும் நம்புகிறார்கள். நம் முன்னோர்கள் சூரியனைப் பார்த்து நேரத்தை அறிந்த காலத்திலிருந்து இன்று ஸ்மார்ட் வாட்ச் வரை கடிகாரத்தின் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நாளில், கடிகாரம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது.
ஆனால், நீங்கள் கவனித்திருக்கலாமா? உங்கள் கைக்கடிகாரம் நேரத்தை மட்டும் காட்டுவதில்லை; அது உங்கள் வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தையும், ஆற்றல் சமநிலையையும் பாதிக்கக்கூடிய ஒன்று. வாஸ்து சாஸ்திரத்தின் படி கைக்கடிகாரம் அணிவதில் சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன. அதை பின்பற்றினால் உங்கள் வாழ்கையில் நல்ல மாற்றங்களை காணலாம், இல்லையெனில் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம்.
1. கைக்கடிகாரத்தின் டயல் (Dial)
வாஸ்து படி, கடிகாரத்தின் டயல் மிகவும் பெரியதாகவோ, மிகவும் சிறியதாகவோ இருக்கக்கூடாது.
ஒரு நடுத்தர அளவிலான டயலையே தேர்வு செய்ய வேண்டும்.
வட்டமாகவோ அல்லது சதுர வடிவமாகவோ இருக்கும் டயல் மிகவும் நல்லது.
முக்கோண வடிவ டயல் தவிர்க்கப்பட வேண்டும், இது நல்ல வாஸ்துவுக்கு விரோதமானது.
2. எந்தக் கையில் அணிய வேண்டும்?
வாஸ்து சாஸ்திரம் எந்தக் கையிலும் அணியலாம் எனக் கூறுகிறது.
பொதுவாக இடது கையில் அணிவது வழக்கமாக இருந்தாலும், உங்கள் வசதிக்கேற்ப வலது கையிலும் அணியலாம்.
3. ஸ்ட்ராப் (Strap) எப்படி இருக்க வேண்டும்?
கடிகாரத்தின் ஸ்ட்ராப் உங்கள் மணிக்கட்டுக்கு சரியாக பொருந்த வேண்டியது முக்கியம்.
தளர்வாக உள்ள ஸ்ட்ராப் தவிர்க்க வேண்டும், இது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
ஸ்ட்ராப் சரியாக பொருந்தும்படி அணியப்பட்டால், அது உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவும்.
ஸ்ட்ராப் எப்போதும் உங்கள் மணிக்கட்டு எலும்புக்கு அருகில் இருக்க வேண்டும்.
4. கைக்கடிகாரத்தின் நிறம்
வாஸ்து படி, தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) நிறங்களில் உள்ள கடிகாரங்களை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.
முக்கியமான சந்திப்புகள், வேலை நேர்காணல் அல்லது தேர்வுகளுக்கு செல்லும் போது இவ்வகை கடிகாரங்களை அணிவது உங்களுக்கு வெற்றியை அளிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
5. கடிகாரத்தை வைக்க வேண்டிய இடம்
தலையணைக்கு அடியில் அல்லது அருகில் கடிகாரத்தை வைக்க வேண்டாம்.
இது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தி, உங்கள் மனதில் குழப்பம் மற்றும் கவனச்சிதறலை உருவாக்கும்.
கடிகாரத்தை எப்போதும் நேர்மறையான ஆற்றல் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
கைக்கடிகாரம் என்பது வெறும் நேரத்தை காட்டும் கருவி மட்டுமல்ல. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், சரியான முறையில் அணியப்படும் கடிகாரம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதனால், இந்த வாஸ்து குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் கடிகாரத்தை தேர்வு செய்து அணியுங்கள். உங்கள் ஒவ்வொரு நொடியும் நல்ல அதிர்ஷ்டத்துடன் நகரட்டும்!
(முக்கிய குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தவொரு தகவலையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்)