இங்கிலாந்து வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.