
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
ஐந்து ரி 20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட ரி 20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த ரி 20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதவிருக்கும் 14 பேர் அடங்கிய நியூசிலாந்து வீரர்கள் கடந்த 15 அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஹேமிஷ் பென்னட் பெற்றிருக்கின்றார். ரி 20 சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடாத வேகப் பந்துவீச்சாளரான ஹேமிஷ் பென்னட் உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ரி 20 அணியில் உபாதைகள் காரணமாக அநேக வீரர்கள் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். இந்த வீரர்களில் டொம் லேதம், மேட் ஹென்றி, லோக்கி பெர்குஸன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.